பண்ணை வீட்டில் ஓபிஎஸ் முகாம்..! குவியும் ஆதரவாளர்கள்..!

Published by
murugan

தேனியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓ. பன்னீர் செல்வம் முகாமிட்டுள்ளார். இதைதொடர்ந்து, பண்ணை வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் வருகின்ற தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில்,  கடந்த திங்கள்கிழமை அதிமுக  நடைபெற்றது .

செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, 3 நாள் கழித்து நேற்று தான் முதல்வர் , துணை முதல்வர் இருவரும்  சந்தித்தனர். நேற்று  மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர், துணை முதல்வர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், காமராஜர் நினைவு தினம் என்பதால் கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.இந்த சந்திப்பின் போது, வணக்கம் சொல்லி கொண்டனர். ஆனால், பேசிக் கொள்ளவில்லை. இதையடுத்து, ஓபிஎஸ் சாலை மார்க்கமாக தனது காரில் தேனிக்கு புறப்பட்டார். வழியில் எங்குமே ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த வாரம் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளாமல் தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர்,  மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by
murugan
Tags: #OPS

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago