பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழப்புக்கு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
பிபின் ராவத்தின் மறைவால் நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ராணுவத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பிபின் ராவத்தின் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களும், அவருடைய மனைவியும், மேலும் சில ராணுவ உயர் அதிகாரிகளும், நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெற இருந்த, தேசிய அளவிலான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ராணுவ உயர் அதிகாரிகளுடன் சென்றபோது, அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளாகி, அவர்களில் ஹெலிகாப்டர் பைலட் ஒருவரைத் தவிர, மற்ற 13 பேர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தோம்.
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள் அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்ட தேச பக்தர் என்று அனைவராலும் போற்றப்படுபவர். அவருடன் பயணித்த நம் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றிய வீரர் பெருமக்கள் அவர்களுடைய மரணம் தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
விபத்தில் உயிரிழந்திருக்கும் தளபதி பிபின் ராவத், அவர் தம் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தோர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…