வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 6 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 6 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, உள்பட 6 மாவட்டங்களில் கோடை மலைக்கு வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதமான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அரபிக்கடலில் புயல் உருவாகுவதால் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்த நிலையில், இந்த வருடம் ஜூன் 5 ஆம் தேதி பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து, ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அதில், மற்றோரு திருப்பமாக அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகுகிறது.
இது, நாளை புயலாக வலுப்பெற்று ஓமன் நாட்டை நோக்கி நகர தொடங்கும். இதன் காரணமாக காற்று சுழற்சி ஏற்படுவதால், தென்மேற்கு பருவமழை துவங்குவது தாமதமாக கூடும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புயலால் இந்தியாவிற்கு நேரடி பாதிப்பு கிடையாது. பருவமழையை தாமதப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது.
அதேநேரம் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…