தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.325 கோடி வீதம் 11 புதிய மருத்துவக் கல்லூரிக்கு மொத்தம் ரூ. 3,575 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசு தனது பங்காக 60 சதவீத நிதியையும் (ரூ. 2, 145 கோடி) , தமிழக அரசு 40 சதவீத […]
கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நிலையை மாற்ற வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி கிராமத்தில் ஒருவருடைய வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது பாண்டி, இசக்கிராஜ், தினேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி […]
அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியலை திமுக செய்கிறது. – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மீது குற்றச்சாட்டினார். இந்த குற்றசாட்டு குறித்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், போலீஸின் நடவடிக்கை மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார். எங்கே தமிழக அரசு […]
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜூம், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலைசெய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை […]
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில், காவலர் மஹாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவலர் மகாராஜன், மாஜிஸ்திரேட் பாரதிதாசனை அவதூறாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 உயிரிழப்பு . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தோரின் விகிதம் 1.34 சதவீதமாக […]
தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,385 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 32 பேர் கொரோனவால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 40,111 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 23,581 பேர் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 58,378 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 58,378 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4329 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலி. […]
தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 4,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,02,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 2,357 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 58,378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே […]
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி ஹேமா விசாரணை நடத்தினர். அதனைதொடர்ந்து, பெண் காவலர் ரேவதியிடம் தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி […]
விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்து வருகிறார்.இவருக்கு அதிமுகவில் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டு இருந்தது.ஆனால் ஒரு சில காரணங்களால் அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அறிவித்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளனர்.மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் […]
NLC விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு .இதனால் பலி 7 ஆக உயர்வு. கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC 2-ம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளார். […]
சிதம்பரத்தில் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட 3 அரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடேசன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் இவருடைய மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும்அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர், இந்நிலையில் மேலும் இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் நண்பர் ஸ்டாலின் என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை விஜயபாஸ்கர் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் […]
ரேஷனில் ஜூன் மாத பொருட்களை வாங்க அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த சமயத்தில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,சென்னை ,சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட சில பகுதிகளிலும் ,மற்றும் மதுரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ,முழு […]
நேற்றைய தினம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 7 வயது சிறுமியின் சம்பவம் குறித்து வேதனையான பதிவை ரத்ன குமார் பதிவிட்டுள்ளார். மேயாதமான், ஆடை உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ரத்ன குமார். தற்போது இவர் விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து வசன கரத்தாவாக பணியாற்றியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். நேற்றைய தினம் அறந்தாங்கியில் 7 வயது […]
தமிழகத்தில் ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும்ப அடைதாரர்களுக்கும் ரூபாய் 1000 உதவித் தொகையுடன், விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து மே மற்றும் ஜூன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்ப […]
மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்து வருகிறது . அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் காவல்துறை மக்கள் மீது செய்யும் அத்துமீறல்களை விசாரிக்க நிலையான அமைப்பை வேண்டி மக்கள் நீதி மய்யம் […]
லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அந்த தாக்குதலில் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் மேலும் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், […]
தூத்துக்குடி அருகே உள்ள சிவகளையில் மகனின் காதல் திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் தாய், உட்பட இருவர் வெட்டி கொன்ற வழக்கில், 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், விவசாயி. இவருடைய மனைவி முத்துபேச்சி (வயது 42). இவர்களுக்கு ஆத்திமுத்து, விக்னேஷ் ராஜா (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விக்னேஷ் ராஜா கடந்த 10 நாட்களுக்கு முன்பு பக்கத்து ஊரான பொட்டல் பகுதியைச் […]