சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை குறித்த விசாரணை நேற்று மதுரை ஐகோர்ட் கிளையில் […]
சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளத. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் நேற்று தொடங்கியது. நேற்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தியது. நேற்று இரவு தந்தை, மகன் இறந்த […]
தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட உதவி ஆய்வாளர் ரகு கணேஷ். சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் வழக்கு தொடர்பான விசாரணையை நேற்று காலை சிபிசிஐடி தொடங்கியது. தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இரவு சி.பி.சி.ஐ.டி தந்தை, மகன் இறந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ. ரகு கணேஷை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட ரகு கணேஷை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் […]
சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சாத்தான்குளம் விவகாரத்தில் இதுவரை 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய நான்கு பேர் மீது 302 (கொலை) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகுகணேஷை அடுத்து தற்போது தலைமைக் காவலர் முருகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கை மீறி கடை திறந்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது புகார் அளித்தவர் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு 7 மணி ஆன போதிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர்கள் அந்த சிறுமையை பல இடங்களில்தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். இன்று வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் […]
சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 குழுக்களாக பிரிந்து சென்று இன்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தந்தை, மகன் இறந்த வழக்கை 302 (கொலை) பிரிவு உட்பட நான்கு பிரிவுகளின் […]
சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 குழுக்களாக பிரிந்து சென்று இன்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் விவகாரத்தில் விசாரணைக்கு பிறகே காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவது பற்றி […]
ஜூலை மாதத்தில் உள்ள நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் மூடல். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது ஜூலை மாதத்தில் உள்ள 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 26 பேரும், அரசு மருத்துவமனையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் விகிதம் 1.52 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 36,826 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும், 22,777 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக […]
தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 94,049பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 2,852 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 52,976 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே […]
இரட்டை கொலை வழக்கு 10 பேருக்கு ஆயுள் . கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவர் கூலித்தொழி செய்துவந்தார், இவருடைய மகன்கள் சதீஸ்குமார் மற்றும் வினோத்குமார் சதீஸ் குமார் இவர் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி சதீஸ்குமார் மற்றும் வினோத்குமாரை 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மற்றும் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 52,926 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 52,926 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 39,856 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் […]
இனிமேல் ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின், தீவிர பரவலால் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு 3 மாதங்களுக்கு சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஜூலை-1 முதல் இந்த தளர்வு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிலிருந்து இந்த சலுகைகள் றது செய்யப்பட்டு, இனிமேல் ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு சேவை […]
திருச்செந்தூர் அருகே அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜரான வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை. தந்தை , மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், தந்தை, மகன் இருவரையும் கோவில்பட்டி […]
கடலூர் மாவட்டம் நெய்வேலி NCL 2-ம் அனல் மின்நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. NCL நிர்வாகத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள் அனல் மின் நிலையம் முன் நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர். இந்நிலையில், பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடி வரை பயணம் செய்தது தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னையிலுள்ள யானைக்கவுனில் நடத்தி வரும் காய்ச்சலுக்கான சிறப்பு முகாமை ஆய்வு செய்ததை பின்னர் அங்குள்ள மக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கியுள்ளார். அதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கொரோனாவிற்கான விழிப்புணர்வை தன்னார்வலர்களை கொண்டு சென்னையில் குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு நடத்தியது நல்ல பலனை அளித்துள்ளதாக கூறியுள்ளார். […]
சென்னை வந்து பணிபுரிந்த வெளி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் அனைத்து மக்களும் வெளியே செல்லவே அச்சத்தில் இருக்கிறார்கள் , இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்,மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர் அனைவரும் தொடர்ந்து பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். குறிப்பாக இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அடங்குவார்கள் இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை 21 […]