#Breaking: தமிழகத்தில் கொரோனவால் ஒரே நாளில் 63 பேர் உயிரிழப்பு.. மதுரையில் மட்டும் 7!

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 26 பேரும், அரசு மருத்துவமனையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 929 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 32 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 335 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் கொரோனவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் விகிதம் 1.52 சதவீதமாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025