தமிழ்நாடு

தூப்பாக்கி சூட்டிற்கு எதிராக குவியும் வழக்குகள்…!!அனைத்தும் இன்று விசாரனை..!!

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும், ஆட்சியர் மீது கொலை வழக்கு பதியவும், காயமடைந்தோரை மதுரை மருத்துவமனைக்கு மாற்றக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தூத்துக்குடியில் கலவரத்தில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தென் மண்டல ஐஜி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும், […]

தூப்பாக்கி சூட்டிற்கு எதிராக குவியும் வழக்குகள்...!!அனைத்தும் இன்று விசாரன 4 Min Read
Default Image

தூப்பாக்கி சூடு:எதிரொலி முதல்வர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் எதிரொலியாக சென்னையில் உள்ள தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், துப்பாக்கிக்சூட்டைக் கண்டித்து சென்னையில் கடந்த 3 நாட்களில் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம், சாலை மறியல் […]

#ADMK 3 Min Read
Default Image

BREAKING NEWS: தூத்துக்குடியில் பேருந்துகள் இயக்கம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பேருந்து சேவை நிறுத்த பட்டு வந்த சூழ்நிலையில் தற்போது பேருந்துகள் இயங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட, கூடுதல் தலைமை செயலாளர் டபிள்யூ.சி.டேவிட்தார், முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரை கண்காணிப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது. தூத்துக்குடிக்கு நேற்று காலை வந்த இருவரும், ஆட்சியர் அலுவலகத்தில், ஏடிஜிபி விஜயகுமார், ஐஜி சைலேஸ் யாதவ், உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ககன்தீப் சிங் […]

BREAKING NEWS: தூத்துக்குடியில் பேருந்துகள் இயக்கம்...!! 3 Min Read
Default Image

ஆளும் தகுதி தமிழக அரசுக்கு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்…!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுகவும் காங்கிரசும் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நூறு நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நூறாவது நாளில் இவ்வளவு பெரிய வன்முறை சம்பவம் நடந்தேறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இது சோதனை முயற்சிதான் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், சிலரின் தூண்டுதல்களால் இது போன்ற சம்பவங்கள் தொடரும் எனவும் எச்சரித்தார்.  இதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை […]

ஆளும் தகுதி தமிழக அரசுக்கு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்...!! 3 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து..!! சென்னையில் போராட்டம் நடத்திய700 பேர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், பேரணியில் பங்கேற்ற வேல்முருகன் உள்பட 700 பேர் மீது, 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் 2 Min Read
Default Image

BREAKING NEWS: ஸ்டெட்லைட் ஆலையை மீண்டும் இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பிப்பு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும்,ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழகம் முமுவதும் போராட்டம் நடந்து வரும் இந்த நிலையில் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான உரிமத்தை கேட்டு விண்ணப்பித்துள்ளது வேதாந்த குழுமம் நேற்று அக்குழுமத்தின் தலைவர் கூறியது: மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடமும் இருந்து அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம். தற்போது ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் நீதிமன்றத்தின், மாநில அரசின் விதிமுறைகளைக் […]

ஸ்டெட்லைட் ஆலையை மீண்டும் இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பிப்பு..!! 4 Min Read
Default Image

இணைய சேவையின்றி ஸ்தம்பித்தது மூன்று மாவட்டங்கள்…!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக 27-ம் தேதி வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க தமிழக அரசு  உத்தரவிட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான, 4 கலந்தாய்வு உதவி மையங்களிலும் […]

இணைய சேவையின்றி ஸ்தம்பித்தது மூன்று மாவட்டங்கள்...! 6 Min Read
Default Image

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து..! தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்…!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தோழமைக் கட்சிகளுடன் திமுக இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதை ஒட்டி, சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைதி தீர்வு காண முயற்சிக்காததை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. பல்வேறு அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகம் […]

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாளை ஆட்டோக்கள் இயங்காது..!!ஆட்டோ சங்கம் அறி 4 Min Read
Default Image

தூத்துக்குடி பதற்றமான சூழல்..! நிலவுவதால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவுவதால், மேலும் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, தூத்துக்குடியில் போடப்பட்டிருந்த தடை உத்தரவு இன்று காலை வரை 8 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக, மாவட்ட […]

தூத்துக்குடி பதற்றமான சூழல்..! நிலவுவதால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு...!! 6 Min Read
Default Image

மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம்…!!வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் கேடு, மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி கடந்த 100 நாட்களாக ஆலையை அருகே வசிக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர் கடந்த 22-ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது மக்களுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன, பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. […]

மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம்...!!வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனி 5 Min Read
Default Image

துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக..!!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. மாவட்டத்தில் இயல்புநிலையை  திரும்பி வருவதாகவும் ஆட்சியர் உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக அரசால் சிறப்பு அதிகாரிகளாக அனுப்பப்பட்ட ககன்தீப் சிங்பேடி, போக்குவரத்துத்துறை செயலாளர் டேவிதார், தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் […]

துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக..!!மாவட்ட ஆட்சியர 4 Min Read
Default Image

சூறாவளி காற்றுடன் ஈரோட்டில் பலத்த மழை பெய்து வருகிறது..!!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக பவானி, கோபி, தாளவாடி, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தது. […]

சூறாவளி காற்றுடன் ஈரோட்டில் பலத்த மழை பெய்து வருகிறது..!! 3 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு..!!அமைதி திரும்ப கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்..!!ராமதாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதி திரும்ப கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் பதற்றமான நிலைமையை கட்டுப்படுத்த மத்திய துணை ராணுவம்  வரவழைக்கப்படவிருப்பதாக செய்திகள் திட்டமிட்டு கசியவிடப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் அச்சமடைவார்கள் என்பது அரசின் எண்ணமாக இருக்கலாம். ஆனால், ஏற்கனவே ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையால் உயிர்களையும், உரிமைகளையும் இழந்து கொந்தளித்துப் போயிருக்கும் மக்கள் இத்தகைய செயல்களால் இன்னும் கோபமடைந்து வருகின்றனர். தமிழக […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் 5 Min Read
Default Image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிக்குழு கூட்டம்..!!பிரமுகர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்பு..!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைத்திக்குழு கூட்டம் தொடங்கியது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ககன்தீப் சிங், டேவிதார் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தென் மண்டல ஐ.ஜி. பங்கேற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவும் இதில் பங்கேற்றுள்ளார். மக்கள் பிரதிநிதிகளாக தூத்துக்குடி நகர முக்கிய பிரமுகர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் தூத்துக்குடி தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள், பாதிரியார்கள் உள்பட 40 பேர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக […]

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைத்திக்குழு கூட்டம் 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 64பேரை சொந்த ஜாமீனில்..! விடுவித்தது தூத்துக்குடி நீதிமன்றம்..!!

தூத்துக்குடியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 64 பேரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக 64 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி குற்றவியல் 1-வது நீதிமன்ற நீதிபதி அண்ணாமலை முன் ஆஜர்படுத்தப்பட்ட ((அவர்கள் இரவு முழுவதும் போலீசார் தங்களை தாக்கியதாக தெரிவித்து சட்டைகளை கழற்றி நீதிபதியிடம் காண்பித்தனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திய நீதிபதி பின்னர்)) அவர்களை 15 நாள் […]

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 64பேரை சொந்த ஜாமீனில்..! விடுவித்தது தூத 3 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடியில் மருந்து கடைகள் திறப்பு…!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன் தினம் போராட்டங்கள் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீவைத்தும் கொளுத்தப்பட்டன. நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் கடந்த 3 நாள்களாக கடைகள்,பேருந்துகள் இயங்காத நிலையில் தற்போது தூத்துக்குடி நகர பகுதியில் பேருந்துகளை தவிர்த்து மற்ற வாகனங்கள் இயங்க தொடங்கியுள்ளன. நகரில் […]

BREAKING NEWS:தூத்துக்குடியில் மருந்து கடைகள் திறப்பு...!! 2 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சி.பி.ஐ. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை என்று வழக்கறிஞர் ஜி.எஸ். மணி மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி. மீது கொலை வழக்கு பதியவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

1 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி: 3மாவட்ட மாணவர்களின் 10 வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் போரட்டங்களும் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருவதாலும் மற்றும் 3 மாவட்டங்களில் இணையதள சேவை தூண்டிப்பாலும் பல்கழை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தூத்துக்குடி ,நெல்லை கன்னியாகுமரி  மாவட்ட மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.3 மாவட்டங்களில் அமைதி திரும்பிய அடுத்த 3 நாளிலுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி: 3மாணவர்களின் மறுகூட்டலுக்கு வ 2 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலியால்..!!பல்கழை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் போரட்டங்களும் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருவதாலும் மற்றும் 3 மாவட்டங்களில் இணையதள சேவை தூண்டிப்பாலும் பல்கழை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது அதன் படி மே 25 முதல் 28ஆம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு மே 29 ஆம் தேதிகளில் இருந்து அட்டவணை படி தேர்வுகள் ஜீன் 5,6,7  நடைபெறும் என அண்ணா பல்கழை கழகம் அறிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

தூத்துக்குடி செய்திகள் 2 Min Read
Default Image

உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் கோரிக்கையை  நிராகரித்தது..!! உயர்நீதிமன்றம் அதிரடி

தூத்துக்குடி சம்பவத்தில் இறந்தவர்கள் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டதை மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் உடலை பதப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை  நிராகரித்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. மேலும் உடல்களை மே 30-ம் தேதி வரி பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடலை பதப்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது

கோரிக்கையை  நிராகரித்து உயர்நீதிமன்றம் 2 Min Read
Default Image