குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில், இரண்டு லாரிகள், ஒரு எஸ்யூவி கார், ஒரு வேன், ஒரு ஆட்டோரிக்ஷா, மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மேலும், நான்கு பேர் மாயமாகியுள்ளனர், அவர்களை கண்டறிய தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் (NDRF […]