தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்க்காக மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கிப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடியில் அரசு பேருந்து பணிமனைக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் போலீஸ்சார் வைத்திருந்த பேரிகார்டுடையும் ,தெருக்களில் டயர்களையும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் எரித்துச் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைவருக்கும் துயரமான வருத்தமளிக்கும் சம்பவம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு அரசு உரிய உதவிகளை அரசு வழங்குவதாகக் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்