நெல்லை,கன்னியகுமாரி மாவட்டங்களில் இணையத்தள சேவையை முடக்கத்தை ரத்து செய்துள்ளது தமிழக அரசு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக 27-ம் தேதி வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியகுமார் மாவட்டங்களில் இணையம் […]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரிடையாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் டெல்லிஉயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழக அரசு தாக்கல் செய்யும் அறிக்கையில் உண்மை தன்மை இருக்காது எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நேரிடையாக விசாரிக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் இதனை ஏற்ற டெல்லிஉயர்நீதி மன்றம் தேசிய மனிதஉரிமை ஆணையம் வரும் 29ம் தேதி பரிசீலனையை எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக 27-ம் தேதி வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியகுமார் மாவட்டங்களில் இணையம் முடக்கபட்டது தொடர்பாக இதனை எதிர்த்து வழக்கறிஞர் சூரியபிராகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார் […]
திருச்சியில் மதம் பிடித்த சமயபுரம் கோவில் யானை தூக்கி வீசியும் மிதித்தும பாகனை கொன்றது. திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி எனும் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. 9 வயதான இந்த பெண் யானை கோவில் திருப்பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை யானையின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றத்தை உணர்ந்த பாகன் கஜேந்திரன் அருகில் சென்று பார்த்தார். அப்போது கரும்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றை தூக்கி வீசிய யானை ஆவேசமாக […]
துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பணிமனைகள் என போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் மட்டும் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை மற்றும் பெரம்பூர் பகுதிகளில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டை பனகல் […]
பெங்களூரூவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 840 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை ராஜவீதி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரு சிறிய ரக சரக்கு வேன்களை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் சரக்கு வேன்களின் ஓட்டுனர்கள் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். ஓட்டுனர்களை துரத்திப்பிடித்த போலீசார், மினி ஆட்டோக்களில் சோதனை நடத்தியர். அதில் 840 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி […]
அந்தகால அரசியல் தலைவர்களின் பேச்சு சிந்தனையை தூண்டும் விதமாக இருந்தது என்றும், ஆனால் தற்போது சீமான் உள்ளிட்டோரின் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19 ஆம் தேதி மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கில் […]
தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால்,பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தனியார் உணவகம் சார்பில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது. ஸ்டெர்லைட் போரட்டத்தினால் ஏற்பட்ட கலவரம் காரணமாக தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும்,அவரது உறவினர்களும் உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தான் இதனை அறிந்த தனியார் உணவகத்தை சேர்ந்தவர்கள்,10 ரூபாய்க்கு பிரியாணி மற்றறும் சாம்பார் சாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவின் பெயரில் […]
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் எதிரொலியாக சென்னையில் உள்ள தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், துப்பாக்கிக்சூட்டைக் கண்டித்து சென்னையில் கடந்த 3 நாட்களில் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம், சாலை மறியல் […]