இந்த வருடம் செங்கரும்பு விளைச்சல் நன்றாக அமைந்ததால், வேலூரில் விற்பனைக்கு குவிந்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் வேலூரில் பண்ருட்டி செங்கரும்பு ஒரு கட்டு ரூ.350 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பண்டிகை காலத்தில் அந்தந்த பண்டிகை சீசனுக்கு ஏற்ற பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வேலூர் மார்கெட்டில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் தற்போது செங்கரும்பு சீசன் களைகட்டியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் கரும்பு வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்திக்கு செல்வதாலும், கடினத்தன்மை உடையதாலும் […]
டிசம்பர் 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தொ.மு.ச போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு.போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. போராட்டத்திற்கு பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் – தொ.மு.ச. போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் சண்முகம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.பி.,க்கள் கூட்டம் தொடங்கியது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதிமுக எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெறுகிறது.அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை; நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை
திருமாவளவனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து முன்னேற்றக்கழக தலைவர் கைது; திருப்பூரில் இந்து முன்னேற்றக்கழக தலைவர் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்க்கு முன் திருமாவளவனுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியிருந்தார்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை பழுது பார்க்க மீனவர்களுக்கு அனைத்து வங்கிகளும், வங்கி கடன் அளிக்க வேண்டும் – இந்தியன் வங்கியின் அகில இந்திய ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : 19-ம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிடலாம் – தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றம்; புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன்நாயர் நியமனம்.சற்று நேரத்திற்கு முன் தான் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து திமுவினர் மனு அளித்தனர்.தற்போது உடனே மாற்றபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகரில் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு. தேர்தல் அதிகாரி வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும். பணப்பட்டுவாடா செய்ய கணக்கெடுக்கும் ஆதாரம் எங்களிடம் உள்ளது தமிழிசை.ஆர்.கே.நகரில் வெளியாட்களை அனுமதிக்க கூடாது எனவும் கோரிக்கை.
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து திமுவினர் மனு.
“டைம்ஸ் நவ் என்கிற தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேகர் ரெட்டியின் டைரியில் உள்ளவை என சில பக்கங்கங்களை நேற்று வெளியிட்டது. அதில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும், சில கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், சேகர்ரெட்டியிடம் இருந்து தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் பலர் பணம் பெற்றதற்கான பட்டியலை அதிமுக தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டிருந்தது. அதில் பல்வேறு பத்திரிகை ஆளுமைகள் பணம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. […]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடாவைத் தடுக்க வலியுறுத்தி பாஜகவினர் சாலை மறியல்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? எப்போது வருவார்? இனி எதுக்கு வருகிறார்? என பலதரபட்ட கேள்விகள் தமிழக மக்களிடம் உள்ளது. சிலர் எதிர்ப்பு தெரிவித்தும். சிலர் ஆதாரவு தெரிவித்தும் வருகின்றனர். இந்த அரசியல்வருகை பற்றிய செய்தி, 1996இல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிததிலிருந்தே தீயாய் பரவுகிறது. அண்மையில் அவர் தனது ரசிகர்களை அழைத்து சென்னையில் அவர் பேசிகையில், ‘சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். […]
அதிமுக அரசில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது.ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து புகார் மனுவை அளித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது – ஆளுநரை சந்தித்தபின் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேட்டி
கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடுதல் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் – அமைச்சர் ஜெயக்குமார் . 56 படகுகள் இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்
ஆர்.கே.நகரில் தேர்தல் விதிமுறைகள தாண்டி அதிகளவில் செலவு செய்யப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.
தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத்தின் ஒரு பகுதியாக மெகா லோக் அதாலத் தொடங்கியது 10 வகையான 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை, கீழமை நீதிமன்றங்களில் 530 அமர்வுகளில் விசாரணை
சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி அதில் கட்டு கட்டாக பணம், மேலும் ஒரு டைரி கைப்பற்ற பட்டதாகவும், அந்த டைரியில் அதிமுக அமைச்சர்கள் ஓபிஎஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டியிடம் தொலைபேசி வாயிலாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவர் கூஒரியதாவது, தனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. மேலும் தான் ஓபிஎஸ்-ஐ இரு முறை மட்டுமே சந்த்திதுள்ளதாகவும், கோயில்களில் சந்தித்ததாகவும் அந்த போட்டவை […]
ஆர்கே நகர் இடைதேர்தலில் TTV.தினகரன் தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய தொப்பி சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வாதிட்டார். ஆனால், பெயர் பதிவு செய்த கட்சிகளுக்கே முன்னுரிமை எனவும், குலுக்கள் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தொப்பி சின்னமானது பதிவு செய்யப்பட்ட கட்சியான கொங்கு முன்னேற்ற கழகத்துக்கு அறிவிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதியன்று இறந்தார். அவரது மறைவில் சந்தேகம் உள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. அதில் அப்பல்லோவில் மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பங்கேற்ற மருத்துவர் பாலாஜியை விசாரிக்கையில் அவர், தான் ஜெயலிதாவுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. ஜெவுக்கு லண்டன் எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் மருத்துவம் பார்த்தனர். மேலும் ஜெ இட்லி […]
ஆர்கே நகரில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. இதன் வேட்புன்மனுதாக்கலிலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. அதிமுக, திமுக, தினகரன், பாஜக, நாம் தமிழர் என பலர் வரிசை கட்டி போட்டி போட்டாலும், சுயேட்சையாக நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, பிறகு மனு ஏற்றுகொள்ளபட்டு, பின் மீண்டும் தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையம் பெரும் சர்ச்சையை சந்தித்தது. இந்நிலையில் இன்று மாலை 3 […]