வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா..? உங்களுக்காக போக்குவரத்து கழகம் கொடுத்த ஹாப்பி நியூஸ்.!
நாளை வார இறுதி நாள், சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, சென்னையிலிருந்தும் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தமாக 400 சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்பட உள்ளது. மேலும், […]