தமிழ்நாடு

கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது – டிடிவி தினகரன் எச்சரிக்கை

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது, கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு தினம் தோறும் 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு ஏற்க மறுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேட்டூர் அணையின் நீர் […]

4 Min Read
TTV DHINAKARAN

இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை.! இதற்கு காரணம்.., செஸ் நாயகன் பிரக்ஞானந்தா பெருமிதம்.!

அர்பைஜானில் நடந்த செஸ் உலககோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் கிராண்ட்மாஸ்டர் பிரகஞானந்தா. உலக கோப்பையில் வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய  பிரகஞானந்தாவுக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு பிரகஞானந்தா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழக அரசு சார்பில் 30 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகஞானந்தாவுக்கு வழங்கினார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். அதன் பிறகு பேசிய பிரக்ஞானந்தா,  இந்தியாவின் செஸ் […]

3 Min Read
Praggnanandhaa

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறுக.. இல்லையென்றால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. – தேமுதிக தலைவர்!

சுங்க கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் செப்.1ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே விலைவாசி உயர்வால், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், சுங்கக்கட்டணத்தை உயர்த்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். […]

3 Min Read
vijayakanth

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஒரே நாளில் 15 புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி.! அரசாணை வெளியீடு.!

பத்திரப் பதிவுத்துறையில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஒரே நாளில் 15 புதிய கட்டடங்களுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “பத்திரப் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் சொந்த கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்திரவிட்டிருந்தார்கள்.” “அதற்கிணங்க நடப்பாண்டில் ஏற்கெனவே 44 புதிய அரசு கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணைகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.27.48 கோடி மதிப்பில் மேலும் 15 […]

4 Min Read
registrar offices

உலக அரங்கிலும் தனி இடத்தை பிடித்த தமிழ்நாடு..! பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!

உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில், தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் திறந்த வெளி வாகனம் மூலம் மேள தாளம் முழங்க, பிரக்ஞானந்தாவை ஊர்வலமாக கூட்டிச் சென்று, நேரு விளையாட்டு அரங்கில் பிரக்ஞானந்தாவுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிரக்ஞானந்தா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, உலக செஸ் தொடரில் தான் வென்ற பதக்கத்தை, அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த […]

5 Min Read
Udayanidhicongrat

ஓ.பி.எஸ்-யின் அடுத்த மூவ்! செப்.3 முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்று மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையும் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஒன்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை […]

7 Min Read
opanneerselvam

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.8.25 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்.!

இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலமாக தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட ரூபாய் 8.25 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தனுஷ்கோடி வழியாக சுமார் 15 கிலோ கடத்தல் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். தங்கம் கடத்தப்படுவது குறித்து தகவல் அறிந்த சுங்கத்துறையினர், கீழக்கரை அருகே அந்த நபரை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்து 15 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 Min Read
gold seized

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், நீலகிரி, கோவை, நாமக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளை மற்றும் நாளை […]

2 Min Read
Rain

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை!

மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாமன்னர், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 308-ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவனின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு […]

2 Min Read
144 section

திடீர் மயக்கம்..! மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது வீட்டில் பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிண்டியில் உள்ள கலைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர்களால் தேவையான பரிசோதனை செய்யப்பட்டார். அதன்படி, மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது திடீர் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பியுள்ளார். இது குறித்து வெளியான மருத்துவமனை அறிக்கையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் இதயத்தில் எவ்வித அடைப்பும் […]

4 Min Read
M. Subramanian

வெளுத்து வாங்க போகும் கனமழை: 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

தமிழ்நாட்டில் இன்றும், நாளை மற்றும் நாளை மறுநாள்  (செப்.,1ம் தேதி) என அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]

4 Min Read
rain

24 மணி நேரத்தில் வெள்ளை அறிக்கை – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட ரூ.10.76 லட்சம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை என்ற முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். கோவை பேரூர் பகுதியில் நடைபெறும் நொய்யல் திருவிழாவின் 5ஆம் நாள் நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு நிதி […]

5 Min Read
Annamalai BJP State president

காலை சிற்றுண்டி திட்டதிற்கு பிள்ளையார் சுழி போட்டதே அதிமுக ஆட்சியில் தான்.! ஜெயக்குமார் கருத்து.!

இன்று சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தின் முன்னேற்ற்றத்திற்காக பாடுபட்டவர் மூப்பனார். 22 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அவருடைய புகழ் நிலைத்து நிற்கிறது என்றால், தமிழகத்திற்கு அந்தளவுக்கு நல்லது செய்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசை நிர்பந்தித்து தமிழகதிற்கு நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தன்னுடைய குடும்ப சொத்தை, தஞ்சாவூர் […]

4 Min Read
Jayakumar ADMK

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரக்ஞானந்தா சந்திப்பு.! தான் வென்ற பதக்கத்தைக் காண்பித்து மகிழ்ச்சி.!

உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில், மலர்கள் தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவை விளையாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் பூங்கொத்துக்கொடுத்து வரவேற்றனர். இதன்பின் திறந்த வெளி வாகனம் மூலம் மேள தாளம் முழங்க, பிரக்ஞானந்தாவை ஊர்வலமாக கூட்டிச் சென்று, நேரு விளையாட்டு அரங்கில் பிரக்ஞானந்தாவுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, […]

4 Min Read
Pragg meet CM

7.5% இட ஒதுக்கீடு! கூடுதல் கட்டணம் வசூலிப்பதா? – பாமக கண்டனம்

பொறியியல் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவரை கூறுகையில்,  7.5% இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதா?, கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் கேட்டு நெருக்கடி தருவதால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதை தனியார் கல்லூரிகள் […]

3 Min Read
PMK Founder Dr Ramadoss

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழு தலைவர் கனிமொழி  எம்.பி ஆய்வு.! 

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த கனிமொழி எம்.பி தலைமையில் உள்ள நிலை குழு உறுப்பினர்களில் 11 எம்.பி.க்கள் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆய்வு செய்தனர். பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழு மூலம் இந்தியாவில் உள்ள கிராமங்கள் ஆய்வு செய்யப்பட்டு , அதனை மேம்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ராஜ்யசபா எம்பியாக கனிமொழி பொறுப்பில் இருந்த சமயத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேசபுரம் எனும் […]

3 Min Read
DMK MP Kanimozhi visit Madurai Meenakshi Amman Temple

உலக செஸ் தொடரில் 2வது இடம் பிடித்தது மகிச்சியளிக்கிறது..! கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி.!

அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் தொடர் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரை வென்று இறுதிப்போட்டிக்குச் சென்ற பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். டை பிரேக்கர் சுற்றுவரை சென்ற இந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதனால் 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, 21 ஆண்டுகளுக்கு […]

5 Min Read
Pragnananda Interview

கேஸ் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி – ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், உஜ்வாலா திட்டத்தின் கீழ்  சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படும். இதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.400 மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், இதுபோன்று  நாடு […]

4 Min Read
Former Union Minister P Chidambaram

கோடநாடு வழக்கு : 90 சதவீதம் விசாரணை முடிந்த பிறகு சிபிசிஐடி வசம் ஏன் செல்கிறது.? இபிஎஸ் கேள்வி.! 

இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை, காவேரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார் . அவர் கூறுகையில், கோடநாடு சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து அதன் குற்றவாளிகளை கண்டறிந்தது அதிமுக ஆட்சியில் தான். அவர்களுக்குள் ஆதரவாக இருந்து வாதாடியது திமுகவினர். அந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன்தரர்களாக இருந்தது திமுகவினர். ஜமீன்தரர்களுக்கும் […]

5 Min Read
ADMK Chief Secretary Edappadi Palanisamy

செந்தில் பாலாஜி வழக்கு: தன்னால் விசாரிக்க முடியாது.. ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி செப்-15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சமயத்தில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு […]

4 Min Read
senthil balaji bail