இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை.! இதற்கு காரணம்.., செஸ் நாயகன் பிரக்ஞானந்தா பெருமிதம்.!

Praggnanandhaa

அர்பைஜானில் நடந்த செஸ் உலககோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் கிராண்ட்மாஸ்டர் பிரகஞானந்தா. உலக கோப்பையில் வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய  பிரகஞானந்தாவுக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு பிரகஞானந்தா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழக அரசு சார்பில் 30 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகஞானந்தாவுக்கு வழங்கினார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

அதன் பிறகு பேசிய பிரக்ஞானந்தா,  இந்தியாவின் செஸ் தலைநகரம் என நமது சென்னையை அழைக்கலாம் என்றார். அதற்கு முக்கிய காரணமாக செஸ் நாயகன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தமிழ்நாடு அரசு என குறிப்பிட்டார்.

தமிழக அரசு சார்பில் முன்னதாக நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டி, மற்ற செஸ் போட்டிகள் என தொடர்ச்சியாக நடத்தி நிறைய பேருக்கு செஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை தமிழக அரசு உண்டாக்கியுள்ளது என பேசியுள்ளார் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

NASA - Netflix
eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai