தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை,கவர்னர்,சிறப்பு முயற்சிகள் துறை,அமைச்சரவை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது. ஆனால்,கேள்வி நேரம் இல்லாமல் இன்று பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த நிலையில்,இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம என தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,அரசு […]
கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்தத்தின.இதனால்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,தற்போது வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் […]
அண்ணா பல்கலைக்கழகம் தொலைந்துபோன Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி உள்ளது. கிரேடு, மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால், புதிய சான்று பெறுவதற்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் 10 மடங்கு உயர்த்தியுள்ளது. அதனபடி, தொலைந்துபோன Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் […]
காவல்துறையை சீர்திருத்தும் விதத்திலான முயற்சிகளை அரசு திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும் என சிபிஎம் அறிவுறுத்தல். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் அடுத்த நாள். காவல் நிலையத்தில் உயிரிழந்தார். அவருடைய மரணத்திற்கு ‘வலிப்பு நோய்’ காரணம் என்று காவல்துறையினர் கூறிவந்த நிலையில். உடற்கூராய்வு அறிக்கையில் அதற்கு மாறான விபரங்கள் வந்துள்ளன. அதன்படி விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 34 […]
9,55,139 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த நிலையில், இன்றைய மொழிப்பாட தேர்வில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால்,8.22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில்,32,674 மாணவர்கள் நேற்று ஆப்சென்ட் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. 9,55,139 […]
தி.மு.க பதவிக்கு வந்த கொஞ்ச காலத்துக்காவது நல்லது செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் என டிடிவி தினகரன் அறிக்கை. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் திமுகவின் ஒரு ஆண்டுகால ஆட்சி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சி அவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்வதைப் போல சாதனையல்ல; தமிழ்நாட்டு மக்களுக்கு தினம் தினம் சோதனையாகவே அமைந்திருக்கிறது. தி.மு.க பதவிக்கு வந்த கொஞ்ச காலத்துக்காவது நல்லது செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி […]
நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு வழங்கி புதிய பாஜக நிர்வாகிகளின் பட்டியலை வெளிட்டார் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அண்ணாமலை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்றும் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக நிர்வாகிகளின் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், உணவை ஒவ்வாத நெகிழி மூலம் பரிமாறிய 10 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்துள்ளனர். கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட […]
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடைபெற்றது. இந்த நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 847 பேர் ஆப்சென்ட் என தகவல். தமிழக முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால், நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கிய பொதுத்தேர்வு 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 10ம் வகுப்பு […]
பாஜக அரசை சேர்ந்தவர்கள் பேசுவது பேசுவதைப் போல ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என்றும், மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது […]
அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிப்பு. சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சண்முகம் 9-ஆம் தேதியும், செந்தில் பாலாஜி 13-ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து […]
தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சேக் முஹம்மது தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என்றும், மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் […]
கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணாக்கர் விடுதிகளில் ஆண்டுக்கு 3 முறை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பேரவையில் அமைச்சர் […]
ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும். தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கயல்விழி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 200 நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாய தொழிலாளர் நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும். 1,000 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் துரித மின் இணைப்புத் திட்டத்தில் இணைப்பு திட்டத்தில் மின் இணைப்பு […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சி.பி.சி.ஐ.டி. டிஜிபி ஷகில் அக்தர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். விக்னேஷ் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 9 போலீசாரிடம் நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த சமூக விரோதிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து விஜயகாந்த் ட்வீட். கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில், திமுக, அதிமுக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.அந்த வகையில்,மதுரை மாவட்டத்தின் மெரினாவாக இருக்கும் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறினார்.இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள்,தங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று […]
விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாகவே, பள்ளிகள் திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம்தான் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சமீப காலமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த […]