சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக் கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாத நிகழ்வு அடுத்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என்று அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்புக்கு அக்டோபர் 7ம் தேதி தீர்வு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷங்களை எழுப்பி நிகழ்வானது அதிமுக இரு பிரிவாக இருப்பதை வெட்ட வெளிச்சம் போட்டுவது போன்று உள்ளது. இரு பிரிவாக பிரிந்து அதிமுக நிர்வாகிகள் முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனைகளை தற்போது நடத்தி வருகின்ற நிகழ்வும் அரங்கேறி வருகின்றது.
இந்நிலையில் சென்னையில் இன்று இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகச்சியானது நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.சென்னை தீவுத் திடலில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் (urbaser sumeet India) ஆங்கிலத்தில் ஒரு அழைப்பிதழ் ஒன்றை அச்சடித்துள்ளது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்று உள்ளது.
ஆனால் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தமிழில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை. இது தற்போது சர்ச்சையாகி அடுத்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…