பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் கட் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே தரப்படும், மே மாதம் ஊதியம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளது. நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அது மாணவர்களின் படிப்புக்கு பெரும் சிக்கலாக மாறும்.