தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது.? அமித்ஷா விளக்குவாரா.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி.!

தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் தருவாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நேற்று சேலத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அமித்ஷாவின் சென்னை வருகை பற்றி பேசினார்.
முதல்வர் பேசுகையில், தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என பட்டியல் போட முடியுமா என கேட்டார். காங்கிரஸ் – திமுக கூட்டணியில் என்ன செய்தோம் என நாங்கள் பட்டியலிட்டோம். அதே போல பட்டியலிட முடியுமா என விமர்சனம் செய்தார்.
மேலும், இனி மேற்கு தமிழகத்தில் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. திராவிட குரல் தேசிய அளவில் ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஏவல் அமைப்புகள் யார் யாரையோ தமிழகத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். கலகம் வலுத்து நின்றால் எந்த கொம்பனாலும் திமுகவை அசைத்து பார்க்க முடியாது