மக்களிடம் மொழி அச்சத்தை ஏற்படுத்த கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார் உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது வீட்டில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தமிழ்நாடு விடுதலை படையின் கலை லிங்கம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அப்போது, நீதிபதி கிருபாகரன் கூறுகையில், மக்களிடையே மொழி குறித்த அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி என்ற கோஷங்களுடன் செயல்பட்டு வரும் சில அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற முகமூடியை அணிந்திருக்கின்றன.
தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி முழக்கங்களை எழுப்பி சில அரசியல் கட்சிகளும் மாநிலத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றன. 1967க்கு பின் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சிக்கு தமிழ் மொழியே காரணம். மதவாத மற்றும் பயங்கரவாத சக்திகளை திடமாக எதிர்க்க வேண்டும். மொழி பேரினவாதத்துக்கு இடம் அளிக்கக்கூடாது என்றும் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில மொழிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…