"பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள்"- சீமான் பேச்சு!

Please vote for NTK. Seeman pleaded and has said that he will make Tamil Nadu the masterpiece of the world.

பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள். உலகின் தலைச்சிறந்ததாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடல்தீபனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது பேசிய அவர், கடந்த தேர்தலில் வட மாவட்டமான கடலூரில் போட்டியிட்ட நிலையில், தற்போது சென்னையில் போட்டியிடுவதாக தெரிவித்தார். தற்போது கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகிவிட்டதாக வேதனை தெரிவித்த அவர், பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள். உலகின் தலைச்சிறந்ததாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் தெரிவித்துள்ளார்.