தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாஜக எம்.பி...!

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் எம்.பி-யாக உள்ள ராம் ஸ்வரூப் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் எம்.பி-யாக உள்ள ராம் ஸ்வரூப் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் எம்.பி-யாக ராம் ஸ்வரூப் சர்மா உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவர் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட ராம் ஸ்வரூப் சர்மாவை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக, டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலைக்கான எந்த சான்றும் அவரது வீட்டில் சிக்காத நிலையில், இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.