தயவு செய்து முக கவசம் அணியுங்கள்...! காலில் விழுந்து கும்பிடும் அதிகாரி...!

To those who did not wear a face mask, the officer fell to his feet, bowed his head, and asked them to wear a face mask.

முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம், காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு முக கவசம் அணியுமாறு வேண்டுகோள் விடுத்த அதிகாரி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்களை முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், இன்னும் சிலர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக தான் இருக்கின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை அருகே, மணல்மேடு பேரூராட்சி ஊழியர்கள் ஆட்டோ மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மணல்மேடு பேரூராட்சி அதிகாரி சுவாமிநாதன், கடை வீதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம், காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு முக கவசம் அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ இணையத்தி வேகமாக பரவி வருகிறது.