PM தோனி, CM விஜய், ஆளப்போகும் மன்னர்கள் என மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இன்று நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ பட ஷூட்டிங்கும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி ஒரு விளம்பர பட ஷூட்டிங்கும் ஒரே ஸ்டுடியோவுக்கு சென்ற நிலையில் இருவரும் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பில் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்றைக்கு இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மதுரை வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது . அதில் PM என எழுதப்பட்டு அதன் அருகில் தோனி புகைப்படமும், CM என எழுதப்பட்டு அதன் அருகில் விஜய் புகைப்படமும் உள்ளது. அதற்கு கீழ் “ஆளப்போகும் மன்னர்கள்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…