திருப்பத்தூர் வன பகுதியில் உள்ள புள்ளி மான் ஒன்று மலைப்பாம்பு பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி பைரவர் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் மற்றும் மலைப் பாம்புகள் போன்ற பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மலைப்பாம்பு ஒன்று ஒரு புள்ளி மான் குட்டியை பிடித்து விழுங்க முயற்சித்துள்ளது.
அதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், புள்ளிமானை மலை பாம்பிடம் இருந்து மீட்டனர். உடனடியாக புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டு சென்றுள்ளனர்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…