குடியரசு தலைவரின் காவல் விருது..தமிழக காவல் அதிகாரிகள் 24 பேர் தேர்வு!முறுக்கும் காக்கிசட்டைகள் ஜோர்

Published by
kavitha
  • இன்று நாடு முழுவதும் 71 வது குடியரசு தினம் கொண்டாட்டம்
  • தமிழகத்தை சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டின் 71வது  குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையின் 24 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகளை அறிவித்துள்ளார். இந்த விருதுகள் தென்னிந்திய அளவில் தனி சிறப்புடன் பணியாற்றக்கூடிய காவல்துறை  அலுவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்விருது ஆனது காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடு மற்றும் அவர்களின் சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடப்பாண்டின் இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகளை  தமிழக காவல் துறையை சேர்ந்த 3 காவல் அதிகரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

அதன் விவரம்:

  • கூடுதல் காவல் துறை இயக்குநர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு -அபய்குமார் சிங் , சென்னை)
  • கூடுதல் காவல்துறை இயக்குநர், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு-லேஷ்குமார் யாதவ்
  • காவல் கண்காணிப்பாளர்-II, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு-பெ.ல்கு.பெத்துவிஜயன்

ஆகியோர் இந்த விருதினை பெறுகின்றனர்.

21 காவல் அதிகரிகளுக்கு இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருதுகள் அறிவிப்பு விபரம்:

  • சேலம் மாநகர காவல் ஆணையாளர்– க.செந்தில்குமார்
  • சென்னை காவல் கண்காணிப்பாளர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு-சி.ராஜேஸ்வரி
  • காவல் துணை ஆணையாளர், போக்குவரத்து-தெற்கு, சென்னை –  .மா. மயில்வாகனன்
  • சென்னை காவல் துணை ஆணையாளர், ஆயுதப்படை-2, புனித தோமையார் மலை -ர.ரவிசந்திரன்
  • சென்னை காவல் துணை ஆணையாளர், ஆயுதப்படை-1-கி.சவுந்திரராஜன்
  • சென்னை காவல் துணை கண்காணிப்பாளர், பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ச.வசந்தன்
  • நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை-கோ.மதியழகன்
  • காவல் துணை கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, திருநெல்வேலி-வே.அனில்குமார்
  • காவல் உதவி ஆணையாளர், மாநகர குற்ற பிரிவு, திருப்பூர்-கா.சுந்தர்ராஜ்
  • காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தலைமையிடம், சென்னை-சே.ராமதாஸ்
  • காவல் துணை கண்காணிப்பாளர், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, கோவை உட்கோட்டம்-ந.ரவிகுமார்
  • காவல் உதவி ஆணையாளர், புனித தோமையார் மலை போக்குவரத்து அமலாக்கப்பிரிவு, சென்னை-ஷே.அன்வர் பாட்ஷா
  • காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, நாகப்பட்டினம்-க.ரமேஷ்குமார்
  • காவல் ஆய்வாளர், பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை-ம.நந்தகுமார்
  • காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, ஈரோடு-மு.நடராஜன்
  • காவல் ஆய்வாளர், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, தூத்துக்குடி-ந.திருப்பதி
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, சென்னை-அ.மணிவேலு
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை-ந.ஜெயசந்திரன்
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை-த.டேவிட்
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை-ஜே.பி.சிவக்குமார்
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை-ஒய்.சந்திரசேகரன்

ஆகியோர் இவ்விருதினை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

39 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

55 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

4 hours ago