case file [Imagesource Representative]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
காற்று மாசு மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் வண்ணம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தீபாவளி நாளான நேற்று, உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சென்னையில் மட்டும் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. அதேபோல், மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதிகளை சேர்த்து மொத்தம் 199 வழக்குகளும், கோவையில் 66 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…