காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கு ஊராட்சி மன்ற தலைவருக்காக, சுயேட்சையாக லெட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். ஆனால், அவருடைய பெயர் தனலட்சுமி என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வேட்பாளர் பெயர் தவறாக இருப்பதால், வாக்குப்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், தனது வெற்றி பாதிக்கப்படும் என லட்சுமி கூறியதால் உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தனலட்சுமி என்பதில் ‘தன’ என்பதை மட்டும் மையால் அழித்து திருத்தம் செய்யவும் வேட்பாளர் லட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…