ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே உள்ளாட்சி தேர்தல் காரணமாக பொங்கல் பரிசு வழங்கப் படவில்லை.இதனால் தமிழகத்தில் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது.மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.எனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உள்ள நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்றும் அதற்கு பதிலாக 16-ஆம் தேதி விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் நாளை பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது.இதற்காக ஜனவரி 9 முதல் 12ஆம் தேதி வரை ஒவ்வொரு கடையிலும், எந்தெந்த தினத்தில், எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு ,பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்ற விபரம், கடைகள் முன் ஒட்டப்படும். எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வரிசை எண் உள்ள தேதிக்கு சென்று, பொங்கல் பரிசை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…