புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.
2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் 9 லட்சம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் பொங்கல் சிறப்பு திட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதி எனவும் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், துப்பாக்கி தோட்ட துளைத்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு முதலமைச்சர் அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண நிதி ஒப்படைக்கப்பட்டது என்றும் ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலை சிறுவனின் தந்தை கலைச்செல்வன் பெயரில் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…