உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது. அதன்படி சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு பிறப்பித்த பிறகு தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சொத்துகுவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!
இதைத்தொடர்ந்து, நீதிபதி 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைப்பதாகவும், 30 நாட்களுக்கு மேல் அவகாசம் தேவைப்பட்டால் 30 நாட்கள் நெருங்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…