தபால் வாக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

அரசியல் கட்சிகளுக்கு பட்டியலை வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையக் குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழகத்தில் தபால் வாக்கு முறை பின்பற்றப்படும் என்றும் மூத்த குடிமக்களுக்கு மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தது. தபால் வாக்கு முறையை அமல்படுத்துவது எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக திமுக கே.என் நேரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தபால் வாக்களிக்க தகுதியான மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வாக்காளர் பட்டியல் எப்போது வழங்கப்படும்? என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி, அரசியல் கட்சிகளுக்கு பட்டியலை வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து திமுக கே.என் நேரு தொடர்ந்த வழக்கை பிப். 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025