பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்தது.
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர பின்னர் ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, ராஜகோபாலனை ஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்தது.
இதனால், ராஜகோபாலனை மீண்டும் நீதிமன்றக்காவலில் வைக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, மீண்டும் ராஜகோபாலன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…