சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே திறக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் காரணமாக சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மே 3-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குவதால் 12-ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேர்தல் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை மீண்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளி திறந்தவுடன் செய்முறைத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…