மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதா ? பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published by
Venu

மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது.ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வராமல் இருக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இந்நிலையில்  மின்சார சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், புதிய திருத்தங்கள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாகவும் உள்ளது.விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவது மாநில அரசின் உரிமை ஆகும். மேலும் கொரோனா தடுப்பில் மாநில அரசுகள் கவனம் செலுத்துவதால் மின்சார சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.விவசாயிகளுக்கான மின்சார மானியத்தொகை வழங்கும் முறையை தமிழக அரசே தீர்மானிக்க வகை செய்ய வேண்டும். இந்த மசோதா விவசாயிகள் மற்றும் வீட்டு  உபயோக நுகர்வோரையும் இந்த சட்டம் பாதிக்கும் என்பதால் இதனை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

 

 

Published by
Venu

Recent Posts

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

3 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

3 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

4 hours ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

5 hours ago

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

5 hours ago

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

6 hours ago