இன்று தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொகுதி, மாவட்ட மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பு அளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி என அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இவர்களின் 31-வது திருமண நாளாகும். இந்த திருமண நாள் கொண்டாட்டம் வழக்கமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொண்டாப்பட்டு வருகிறது. அதனால், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில்…
அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77),…
பீகார் : ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம் ஆராவில் நடைபெற்ற ‘பீகார் பத்லாவ் யாத்ரா’…
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.…
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…