தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை…!

Published by
லீனா

இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து, மக்கள் மத்தியில் அலட்சிய போக்கு அதிகரித்தது. இதன் காரணமாக,  கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை போல, தற்போதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று  வந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து தன வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விடுதல் போன்றவற்றை குறித்து ஆலோசிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 3 கோடியே 17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்.!

பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்.!

சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…

16 minutes ago

”தாயை அடிக்க முயன்றவர்.., வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து” – ராமதாஸ் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு.!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…

29 minutes ago

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார் – திரை பிரபலங்கள் இரங்கல்.!

சென்னை : பிரபல நடிகர் ராஜேஷ் (75) சற்றுமுன் காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக…

1 hour ago

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.?

சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…

3 hours ago

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…

4 hours ago

ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகினார் எலான் மஸ்க்.!

வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை…

4 hours ago