தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார் – திரை பிரபலங்கள் இரங்கல்.!

தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

Actor Rajesh

சென்னை : பிரபல நடிகர் ராஜேஷ் (75) சற்றுமுன் காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

பிரபலங்களுடன் தனது நினைவுகளை கட்டுரையாக எழுதி வந்த 75 வயதான ராஜேஷ் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு இன்று காலமானார். ராமாபுரத்தில் உள்ள வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, நடிகர் ராஜேஷ் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் எஸ்.வி. சேகர் கூறுகையில், ”நேர்மறை எண்ணம் கொண்ட ராஜேஷ் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் கூறியுள்ளார். நடிகர் பார்த்திபன் கூறுகையில், ”ராஜேஷ் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு” என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி கூறுகையில், ”என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷின் அகால மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ராஜேஷ்

ஆசிரியராக பணியாற்றி வந்தவர் 1974இல் அவள் ஒரு தொடர்கதை மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1979ஆம் ஆண்டு கன்னிப் பருவத்திலே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த 7 நாட்கள், தர்மதுரை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளதோடு பின்னணி குரல் கலைஞராகவும் செயல்பட்டவர். சினிமாவைத் தாண்டி உணவகம், கட்டுமானத் தொழிலும் ஈடுபட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்