”தாயை அடிக்க முயன்றவர்.., வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து” – ராமதாஸ் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு.!

பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அடுக்கடுக்காக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் தளத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Anbumani Ramadoss

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. தற்பொழுது, ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திருக்கிறார்.

விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” பாமக தொடர்பாக இதுவரை 14 பஞ்சாயத்துகளை அன்புமணி வைத்துள்ளார் என ராமதாஸ் கூறியுள்ளார். கூசாமல் அன்புமணி பொய் சொல்வார் என காட்டமாகத் தெரிவித்த அவர், கட்சியில் யாருடைய ஆலோசனைகளையும் அன்புமணி ஏற்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என அனைவரும் தெரிவித்ததாகக் கூறிய ராமதாஸ், 4 சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? கட்டுக்கோப்பாக நடத்திவந்த கட்சியை அன்புமணி அவமானப்படுத்திவிட்டார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அன்புமணி மீது ஆதாரத்தோடு ஒளிவு மறைவின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ராமதாஸ் கூறிய அவர், ” தவறான ஆட்டத்தை துவங்கி வைத்த அன்புமணி, பொதுக்குழு மேடையில் என் தலை மீது மைக்கை போடாததுதான் குறை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், அன்புமணி தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், பாமக எனும் அழகான கட்சியை கண்ணாடி போல் ஒரே நாளில் நொறுக்கியதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

வளர்த்த கடா மார்பில் எட்டி உதைப்பதுபோல் அன்புமணி உதைத்துவிட்டார், தன் தாயின் மீதே பாட்டிலை தூக்கி அடித்தவர் அன்புமணி என்று ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அன்புமணியிடம் தலைமைப் பண்பே இல்லை. இவை அனைத்தையும் ஏதோ போகிற போக்கில் கூறவில்லை, அனைத்திற்கும் ஆதாரங்கள் உள்ளதாகவும் ராமதாஸ் காட்டமாக தெரிவித்தார்.

என் சத்தியத்தையும் மீறி அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என் தவறு என்றும் பகிரங்கமாக அவர் தெரிவித்தார். மக்களையும், தொண்டர்களையும் திசைதிருப்பி அன்புமணி அனுதாபம் பெற முயற்சிப்பதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்ததாகவும் அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்