வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.?
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.
தற்போது, அது வடமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரையில் நீடித்த நன்குமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (29.05.2025) அதிகாலை 5:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.
இந்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே சுந்தரவன சதுப்புநில பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த தாழ்வு மண்டலத்தால் இன்றும், நாளையும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காணப்படும்.
மழைக்கான அப்டேட்
இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!
July 15, 2025
பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!
July 15, 2025
பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!
July 15, 2025