”என் உயிருக்கு ஆபத்து” – தவெகவின் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்!!

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தை ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக புகார் அளித்துள்ளார்.

Aadhav Arjuna - TVK

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்து வருவதால், விசாரணை நடத்த கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா அளித்துள்ள புகாரின்படி, ‘திமுக கொடி பொருத்தப்பட்ட காரில் மர்ம நபர்கள் தன்னைத் தொடர்ந்து நோட்டமிட்டதாகவும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்” அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இந்த மிரட்டல் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து தற்போது தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த விவகாரம் தவெக மற்றும் திமுக இடையேயான அரசியல் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்