வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த டிராகன் விண்கலம்.., வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா.!!

சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் 22 மணி நேர பயணத்திற்குப் பிறகு பத்திரமாகப் புவிக்குத் திரும்பியது.

Subhanshu Sukla -Axiom4

கலிபோர்னியா : சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 22 மணி நேர பயணத்திற்குப் பிறகு பத்திரமாகப் புவிக்குத் திரும்பியது.

இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 (Ax-4) பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, இன்று (ஜூலை 15) பூமிக்கு திரும்பினார். அவருடன் பெக்கி விட்சன் (கமாண்டர்), ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி, மற்றும் டிபோர் காபு ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலமான ‘கிரேஸ்’-இல் பயணித்தனர்.

இந்த விண்கலம் கடந்த நேற்று (ஜூலை 14) மாலை 4:45 மணிக்கு (IST) சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மனி மாட்யூலில் இருந்து பிரிந்து, சுமார் 22.5 மணி நேர பயணத்திற்கு பிறகு,இன்று மதியம் 3:01 மணிக்கு (IST) கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக இறங்கியது.

டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியே வந்த பிறகு, சுக்லா மற்றும் குழுவினர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, புவியீர்ப்புக்கு ஏற்ப மீண்டும் பழகுவதற்காக ஏழு நாள் மறுவாழ்வு திட்டத்தில் பங்கேற்பார்கள். இந்த பயணம் இந்தியாவின் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், NASA, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ISRO இடையேயான சர்வதேச ஒத்துழைப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

சுக்லாவின் தந்தை ஷம்பு தயாள் சுக்லா, இந்த தருணத்தை வரலாற்று சிறப்புமிக்கதாக குறிப்பிட்டு, தங்கள் மகன் நாட்டிற்கு பெருமை சேர்த்ததாகவும், அவரது பாதுகாப்பான திரும்புதலுக்கு நாடு முழுவதும் பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்தார். சுக்லாவின் குடும்பம் லக்னோவில் அவரது வருகையை விளக்குகள் மற்றும் போஸ்டர்களுடன் உற்சாகமாக வரவேற்றது.

வரலாறு படைத்த சுபான்ஷு சுக்லா

சுக்லாவின் இந்த பயணம், 1984-ல் ராகேஷ் ஷர்மாவிற்கு பிறகு விண்வெளிக்கு சென்ற இரண்டாவது இந்தியராகவும்,சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்வையிட்ட முதல் இந்திய விண்வெளி வீரராகவும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த பயணத்தில், அவர் 60-க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டார், இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) வடிவமைத்த ஏழு பரிசோதனைகளும் அடங்கும். இந்த பயணம், ISRO-வின் ககன்யான் திட்டத்திற்கு முக்கியமான அனுபவத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்