பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!

டிராகன் விண்கலம் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியதில் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

கலிபோர்னியா : விண்வெளி பயணத்தை வெற்றிகரமான முடித்துக்கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் பயணித்த டிராகன் விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியா கடல் பகுதியில் வெற்றிகரமான கடலில் இறக்கப்பட்டது.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய டிராகன் விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக பாராசூட் மூலம் கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. இதை தொடர்ந்து விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்து செல்வார்கள்.

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் இருந்து சுமார் 22 மணி நேர பயணத்திற்கு பிறகு சுபான்ஷூ சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியதையடுத்து இந்தியாவில் கொண்டாட்டம் தொடங்கியது. லக்னோவில் உள்ள சிட்டி மான்டேசரி பள்ளிக்கு வந்த சுக்லாவின் பெற்றோர்களான ஷம்பு தயாள் மற்றும் ஆஷா ஆகியோருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு அவர்கள் பூமியில் தரையிறங்கும் முழு நிகழ்வையும் நேரடியாக கண்டு களித்தனர். அப்பொழுது,  பூமிக்குத் திரும்பிய காட்சிகளை கண்டு, சுபன்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா ஆனந்த கண்ணீருடனும், அவரது தந்தைதேசிய கொடியை கையில் ஏந்தியபடி வரவேற்றார். பின்னர், விண்வெளியில் இருந்து சுக்லா திரும்பியதைக் கொண்டாடும் வகையில் அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்