சிறைவாசிகளை உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி – சிறைத்துறை டிஜிபி அறிவிப்பு!!

Default Image

தமிழக சிறைகளில் சிறைவாசிகளை உறவினர்கள் மீண்டும் சந்திக்கலாம் என்று சிறைத்துறை டிஜிபி அனுமதி வழங்கியுள்ளார்.

தமிழக சிறைகளில் சிறைவாசிகளை 16ம் தேதி முதல் உறவினர்கள் மீண்டும் சந்திக்கலாம் என்று சிறைத்துறை டிஜிபி அனுமதி வழங்கியுள்ளார். இதனை e- prisons visitors management system அல்லது சிறைகளின் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறைவாசிகளை உறவினர்கள் சந்திக்க வேண்டுமென்றால், சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வருகை தர வேண்டும் என்றும் அதிகபட்சமாக 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஒரு சிறைவாசிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்