தனியார் பள்ளிகள் கட்டணம்: தீர்ப்பு இன்று வெளியாகிறது..!

Published by
murugan

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணத்தை 2 தவணையாக அதாவது 40% மற்றும் 35%  வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கியது.

இந்த வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் 85 சதவீத கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிவழங்கியுள்ளது. கட்டணம் செலுத்தாதவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அது தமிழகத்துக்கு பொருந்தாது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து என தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக்குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

18 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

19 hours ago