Tamilnadu CM MK Stalin
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவானது, பசும்பொன்னார் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது. காலை முதலே முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தனது மரியாதையை செலுத்திவிட்டு, அதன் பின்னர், செய்தியாளர்களிடம் முத்துராமலிங்க தேவர் குறித்தும், அவரது நினைவாக திமுக செய்த பணிகள் குறித்தும் பேசினார்.
முத்துராமலிங்க தேவர் சிலை மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.!
அவர் கூறுகையில், சுதந்திர போராட்டத்திற்காக போராடி 6 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர் முத்துராமலிங்க தேவர். அவரது நினைவை போற்றும் வகையில் இன்று அவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்துள்ளளோம். 1963ஆம் தேவர் மறைந்த போது கலைஞரும், அண்ணாவும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தேவரின் இறுதி அஞ்சலி அரசு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.
1963இல் இறுதி சடங்கிற்கு தேவையான அரசு உதவிகளை செய்தவர் கலைஞர். 2007ஆம் தேவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக முன்னெடுத்தவர் கலைஞர். தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு ஏற்பாடு செய்தவர் கலைஞர். 10 லட்சம் மதிப்பீட்டில் நூற்றாண்டு வளைவு. நூலகம், முளைப்பாரி மண்டபம், முடிகாணிக்கை மண்டபம் என மொத்தமாக 2.5 கோடி ரூபாய் செலவில் பசும்பொன்னில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் கலைஞர்.
மதுரை கோரிபாளையத்தில் பிரமாண்ட தேவர் சிலையை அமைத்தவர் பி.கே.மூக்கையா தேவர். அந்த பிரமாண்ட தேவர் சிலை திறப்பு விழாவை அன்றைக்கு குடியரசு தலைவரை மதுரைக்கு அழைத்து அரசு விழாவாக அதனை மாற்றியவர் கலைஞர். மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள பாலத்திற்கு முத்துராமலிங்க தேவர் பாலம் என பெயர் சூட்டியவர் கலைஞர். கமுதி, உசிலம்பட்டி பகுதிகளில் முத்துராமலிங்க தேவர் பெயரில் கல்லூரிகள் அமைத்தவர் கலைஞர்.
1989ஆம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய உட்பிரிவை அமைத்து தேவர் இன மக்கள் வாழ்வில் முன்னேற வழிவகுத்தவர் கலைஞர். முத்துராமலிங்க தேவர் வீரராக பிறந்தார் , வீரராக வாழ்ந்தார், வீரராக மறைத்தார் என கூறிவிட்டு, தற்போது 2 நாள் முன்னதாக தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள் வந்து செல்ல எதுவாக 1.5 கோடி செலவில் இரண்டு மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தேன் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…