பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் – மதுரை மாநகராட்சி அறிவிப்பு!

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது என அறிவிப்பு.
மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது. அதன்படி, நாளை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் ஆணையாளர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில் வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம். எனவே, பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!
July 6, 2025
”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
July 5, 2025
12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!
July 5, 2025
ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!
July 5, 2025