பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் தேதி குளறுபடி.! ஆசிரியர்கள் குழப்பம்.!

Published by
Dinasuvadu desk

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மற்றும் தேர்வு முடிவுகள் தேதி குளறுபடியால்ஆசிரியர்கள் குழப்பம் .

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் 10 வகுப்பு மற்றும் +2 மாணவர்கள்  கடைசி தேர்வில் பலர் கலந்து கொள்ளவில்லை. அதுபோல் +1 மாணவர்களுக்கான கடைசி தேர்வு மட்டும் நடைபெறவில்லை. இதனால், அந்த தேர்வை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 10, 11 மற்றும்  12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான தேதியை நேற்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். 

அதன்படி +2-ம் வகுப்புக்கு ஜூன் 4-ம் தேதியும்,  +1-ம்  வகுப்புக்கு ஜூன் 2-ம் தேதியும், அதுபோல் 10-ம் வகுப்புக்கு   ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வினாத்தாள் திருத்தும் பணிக்கான அறிவிப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வரும் 28-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை +2 விடைத்தாள் திருத்தும் பணியும், ஜூன் 11 முதல் 23-ம் தேதி வரை + 1 வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.

இதுபோல், 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 16-ம் தேதி முதல் ஜூன் 23-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற வேண்டும். ஆனால், தவறாக  ஜூலை 23-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் பணி ஜூன் 24 முதல் ஜூலை 7-ம் தேதிக்கு பதிலாக ஜூலை 24-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

38 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

43 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago