தரக்கட்டுப்பாடு – செயற்கை இழை, பஞ்சு, நூல்களுக்கு விலக்கு தேவை – முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம்.
செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், செயற்கை இழை, விஸ்கோஸ் இழைகளுக்கு தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாய சான்று பெறும் முறையில் பாதிப்பு ஏற்படுகிறது. மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணை, ஜவுளி தொழிலில் தற்போதைய பணிகளில் தடைகளை ஏற்படுத்தும்.
விஸ்கோஸ் பஞ்சு, செயற்கை இழை பஞ்சுக்கு தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் இருந்து விலக்கு தர வேண்டும். தரக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும் முன் போதிய அவகாசம் வழங்கி ஜவுளி தொழிலை காக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.