பாராளுமன்றத்தில் சிவப்பு பெயிண்டை ஊற்றி வினோத் போராட்டம்.! இரு சமூக ஆர்வல பெண்கள் கைது.!

scotland parliment

ஸ்காட்லாந்து அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் இரு பெண்கள் சிவப்பு பெயிண்ட் ஊற்றி போராட்டம் நடத்தினர். 

ஸ்காட்லாந்து நாட்டில் பாராளுமன்றத்தில் இரு பெண்கள் வினோதமான எதிர்ப்பு போராத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலைகளால் சுற்று சூழல் மாசு படுகிறது என்றும் அதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இரு பெண்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

இதில், ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் சிவப்பு வண்ண பெயிண்டை சுவற்றில் வீசி 26 மற்றும் 23 வயதுடைய இரு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பாக எங்கள் அரசாங்கம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குறித்து கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர். மேலும், இந்த கோடையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் போராட்டம் செய்வோம் என்றும், ஸ்காட்லாந்தின் எண்ணெய் தொழிலை நாங்கள் மூடுவோம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறினார்.

கைது செய்யப்பட்ட  இருவர் மீது காழ்ப்புணர்ச்சி மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்