ஆப்பிள் நிறுவனத்தில் மோசடி; இந்திய வம்சாவளி திரேந்திர பிரசாத்-க்கு 157 கோடி அபராதம்.!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரேந்திர பிரசாத், ஆப்பிள் நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்டதற்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 157 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் பணியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரேந்திர பிரசாத், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து அஞ்சல் மற்றும் கம்பி மோசடியில் ஈடுபட்டு 139 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதற்கு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 157 கோடி ரூபாய் அபராதமாக திருப்பி செலுத்தவேண்டும் என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. 2008 முதல் டிசம்பர் 2018 வரை ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது, இவர் மீது பணமோசடி செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டது, அதாவது உதிரிபாகங்களைத் திருடினார், மற்றும் இன்வாய்ஸ் பில் கணக்குகளையும் உயர்த்தி காட்டியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.